வவுனியா பொது வைத்தியசாலைக்க இன்று காலை 8.30மணியளவில் வைத்தியர் அதிகாரிகள் சங்கத்தினரால் மேற்கொள்ளும் வேலை நிறுத்தத்தை படம் பிடிக்கவும் செய்திகள் சேகரிக்கவும் சென்ற தமிழ், சிங்கள உடகவியலாளர்களை புகைப்படக்கருவியுடன் உட்செல்ல அனுமதிக்காது தகாத வார்த்தைகளதல் ஏசியதுடன் ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் ஊடகவியலாளர் மீது தாக்கவும் முயற்சித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு செய்திகள் சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்கள் சென்று வருவதும் அவர்களுக்கு தடைவிதிப்பது கிடையாது ஆனால் வவுனியா பொது வைத்தியசாலைக்கு ஊடகவியலாளர்களை அனுமதிப்பது கிடையாது பொறுப்பான பதிலும் அவர்களிடமிருந்து கிடைப்பதில்லை இன்றைய நிலையில் ஊடகவியலாளர்களம் அவர்களின் உரிமைக்கு போராடவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஊடகவியலாளர்களை தகாத வர்த்தைகளினால் பேசுவது வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றுள்ளது. இன்று வவுனியா பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து வுகாதார அமைச்சர், வடமாகாண சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அறிக்கையிட உள்ளதாக வவுனியா மாவட்ட ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Comments

comments, Login your facebook to comment