வவுனியா ஹொரவப்பத்தானை வீதி மத்திய சந்தைக்கு  அருகே இன்று (01.12.2016) மாலை 4.40மணியளவில் நடைபெற்ற முச்சக்கரவண்டி விபத்து இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்

சாயி சிறுவர் இல்லத்துக்கு சொந்தமான பேரூந்து ஹொரவபொத்தான வீதி வழியாக சென்றுகொண்டிருந்த போது மத்திய சந்தைக்கு அருகே முச்சக்கர வண்டி ஒன்று துவிச்சக்கர வண்டியை முந்தி செல்ல முற்பட்ட வேளை முச்சக்கர வண்டி தடம்புரண்டு பேரூந்தின் முன் மோதியதியதாலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டியில் பயணித்த நவநீதராசா(45), மரியதாஸ்(65) ஆகிய  இருவரும்  படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் மதுபோதையில் இருந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விபரங்களை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC_0004DSC_0003 DSC_0005 DSC_0006 DSC_0007 DSC_0008 DSC_0012 DSC_0013 DSC_0014 DSC_0015 DSC_0016 DSC_0017 DSC_0019 DSC_0020 DSC_0021 DSC_0025 DSC_0026 DSC_0030 DSC_0033 DSC_0034

Comments

comments, Login your facebook to comment