0162தியதலாவ – கல்எதண்ட பிரதேசத்தில் இன்று(30) காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான், சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக கூறப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பில் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை தியதலாவ பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment