யாழ். குடா நாட்டில் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை நீடித்து வரும் நிலையில் வரலாறு காணாத வகையில் குடாநாட்டின் வெப்பநிலை 19.8 பாகை செல்சியஸ் ஆக உள்ளதாக யாழ். மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் கூறியுள்ளார்.

குடா நாட்டின் காலநிலை நிலவரம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்

தெற்மேற்கு வங்க கடலில் உருவான ‘நடா’ சூறாவளி தற்சமயம் காங்கேசன்துறையில் இருந்து வடக்கே 200 கி லோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

இது தமிழகத்தின் வடக்கு பக்கமாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஆகிய பகுதிகளில் காற்றின் வேகம் 30 கிலோ மீற்றர் தொடக்கம் 40 கிலோ மீற்றர் வேகம் வரையில் காணப்படும் எனவும் தற்போது வேகம் 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வரையில் அதிகாரிக்கலாம் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆழம் கூடிய பகுதிகளில் காற்றின் வேகம் 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வரையில் இருக்கும் எனவே கடற்றொழிலாளர்கள் அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கப்படுகின்றார்கள்.

எனினும், நேற்று மாலை 16.8 பாகை செல்சியஸ் ஆக காணப்பட்ட குடா நாட்டின் வெப்ப நிலையாது. தற்சமயம் 19.8 பாகை செல்சிஸ் ஆக காணப்படுகின்றது. இதனால் குளிர்அதிகமாக காணப்படும் எனவும் இது தொடருமாக இருந்தால் ஆபத்து எனவும் கூறப்பட்டுள்ளது.

தற்சமயம் காற்று தரையில் 26 கிலோ மீற்றர் வேகத்தில் வீசி வருகின்றது. நேற்று மாலை தொடக்கம் இன்றைய தினம் காலை 8.30 மணி வரையில் 35 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதில் பருத்தித்துறை- வல்லிபுரம் பகுதியில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment