நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை தொடர்கின்றது இந்நிலையில் முல்லைத்தீவு கடற்கரையில் மர்ம மீன்கள் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட போது இவ்வாறு மர்ம மீன்கள் கரையொதுங்கியதாகவும், தற்பொழுதும் கரையொதுங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்காரணமாக சுனாமி வரும் என்னும் அச்சம் பொதுமக்களிடையே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆர்ப்பரித்த சுனாமி என்னும் ஆழிப்பேரலையின் தாக்கத்தினால் இலங்கையில் 40,000 க்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்டும் காணாமல் போயுமுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

முல்லைத்தீவில் ‘நாடா’ புயலின் தாக்கம் ! மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்பு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள “நாடா” எனும் புயலின் தாக்கத்தினால் வடக்கில் கடும் காற்றுடன் கூடி மழை பெய்து வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பகுதிகளும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் இருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் நேற்று(30) இரவு நிலைகொண்டிருந்த நாடா புயல் முல்லைத்தீவு மற்றும் யாழ்குடா ஊடாக வடமேற்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அலகு அறிவித்துள்ளநிலையில்

முல்லைத்தீவு பகுதியில் கடும் காற்று வீசிவருவதனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் கடும் காற்று வீசிவருவதோடு புயல் தாக்கம் ஏற்ப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காற்று பலமாக வீசுவதோடு பாரிய அலைகள் எழ கடல் கொந்தளிப்பாக காணப்படுவதானாலும் தொடர்ச்சியாக மழைபெய்துவருவதாலும் மீன்பிடியை ஜீவனோபாயமாக கொண்ட முல்லைத்தீவை சேர்ந்த கடற் தொழிலாளர்கள் எவரும் கடலுக்கு செல்லமுடியாத நிலை காணப்படுகின்றதோடு தொழிலை மேற்கொள்ளும் வள்ளங்கள் உள்ளிட்ட உபகரணங்களையும் கரையிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளதையும் காணமுடிகின்றது

Comments

comments, Login your facebook to comment