கிளிநொச்சியில் வீசிய பலமான நாடா எனப்படும் புயல்காற்றினால் இன்று காலை 8.30 மணியளவில்  கிளிநொச்சி முரசுமோட்டை  முருகானந்தா கல்லூரியில் உள்ள தற்காலிக வகுப்பறைத்தொகுதி ஒன்று முற்றாக சரிந்து வீழ்ந்துள்ளது.

திருகோணமலையில் இருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்த நாடா புயல் முல்லைத்தீவு மற்றும் யாழ்குடா ஊடாக வடமேற்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்திருந்தது.

இன்று காலை கிளிநொச்சியில் பலமாக வீசிய குறித்த புயலினால் கிளிநொச்சி முரசுமோட்டை  முருகானந்தா கல்லூரியில் உள்ள தற்காலிக வகுப்பறை தொகுதி ஒன்று முற்றாக கீழே விழுந்துள்ளது.

பாடசாலையில் மாணவர்கள் இருந்த போதிலும் எவருக்கும்  எந்தவிதமான பாதிப்புக்களும்  ஏற்படவில்லை என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

15230832_689889337843981_5755667287203564398_n 15268014_689889324510649_982439210808992402_n 15268024_689889417843973_5454825327023892875_n 15319234_689889347843980_7686605965278023860_n

Comments

comments, Login your facebook to comment