625.500.560.350.160.300.053.800.900.160.90கிளிநொச்சி, ஆனையிறவு மற்றும் குறிஞ்சாதீவு உப்பளங்கள் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொள்ளப்படவிருந்த ஆர்ப்பாட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை ஆனையிறவு உப்பளத்திற்கு முன்பாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனையிறவு உப்பளத்திற்கு முன்பாக காலை ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பளங்களின் சுற்றயல் கிராம மக்கள் அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

ஆனால், காற்றுடன் கூடிய மழை காரணமாக குறித்த ஆர்ப்பாட்டத்தை தாங்கள் பிற்போட்டுள்ளதாகவும் விரைவில் இன்னுமோர் தினத்தில் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அது தொடர்பில் அனைவருக்கும் அறிவிக்கப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment