cropped-iranamadu_tank_sri_lanka1“கிளிநொச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை (01) அதிகாலை பெய்த மழை காரணமாக இரண்டு குளங்கள் வான்பாயத் தொடங்கியுள்ளன” என கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் அறிவித்துள்ளார்.

“இதன்படி இரணைமடுக்குள மழை வீழ்ச்சி 44.1 மில்லிமீற்றர், கரியாலைநாகபடுவான் மழை வீழ்ச்சி 28.3 மில்லிமீற்றர், அக்கராயன்குளம் மழை வீழ்ச்சி 36.3 மில்லிமீற்றர் என பதிவாகியுள்ளது. 19 அடி 01 அங்குலம் கொள்ளளவுடைய புதுமுறிப்புக்குளம், 10 அடி 7 அங்குலம் கொள்ளளவுடைய கனகாம்பிகைக்குளம் என்பன வான் பாயத்தொடங்கியுள்ளன” என அவர் மேலும் கூறினார்.

Comments

comments, Login your facebook to comment